தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் - வேண்டாம் என மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரல்!
தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் தருவதாக சொன்னவுடன் அதனை வேண்டாம் என உணவக ஊழியரிடம் மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி படிப்பை முடித்து டீசண்டான வேலை நல்ல சம்பளத்தில் சொகுசான அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தால் அதுதான் ஆகச்சிறந்த சாதனையாக நவீன கால சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட வேலையைத் தேடி இன்று உலகின் பல பெருநகரங்களில் இளைஞர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
மறுபுறம் படித்து முடித்த இளைஞர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் வேலையில்லா பட்டதாரிகளாக வீட்டிற்குள் முடங்குகின்றனர். அல்லது படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு தொழிலோ, அல்லது நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நிலை பெரும்பாலான இடங்களில் உருவாகி உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறீர்கள். திடீரென ஒரு நபர் உங்களிடம் வந்து உங்களுக்கு 50 லட்சம் பணம் தருகிறேன். ஒன் டைம் செட்டில்மண்ட்.., ஆனா ஒரு கண்டிஷன் அப்டின்னு சொன்னா என்ன செய்வீர்கள்.
பெரும்பாலான நபர்கள் சற்றும் தாமதிக்காமால் .. அடுத்த நொடியே கண்டிஷனை சொல்லுங்க என நேரா 50லட்சத்திற்கு வந்து விடுவோம். சரி இப்பொழுது கண்டிஷன் என்னவெனில் நீங்கள் மாதம் ஆயிரத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள்.., உங்களது வேலை உடனே விட்டுவிட்டால் உங்களுக்கு கிடைக்கப் போகும் தொகை 50 லட்சம் என சொன்னால் உடனே வேலையை விட்டுவிட்டு 50லட்சத்தை அலாக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவீர்கள் அப்படித்தானே..
இதேபோல ஒரு சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்துள்ளது. திடீரென ஒரு நபர் கையில் 83லட்சம் பணத்துடன் வந்து இந்த வேலையை உடனே விட்டுவிட்டால் இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு பதலளித்த அந்த பணியாளர் “ கடையில் மொத்தமாக 3பேர் தான் இருக்கிறோம்.., நான் உடனே வேலையை விட்டு நின்றுவிட்டால் அது மிகவும் சிரமமாகிவிடும். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். என்னால் வேலையை விட முடியாது என தெரிவித்துள்ளார்.
Restaurant worker turns down $100K to quit his job and receives a special reward. pic.twitter.com/kPWxW93YIt
— Historic Vids (@historyinmemes) July 13, 2024
பணத்தை கொடுப்பதாக சொன்ன அந்த நபர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலான நிலையில் உணவகத்தின் உரிமையாளர் பணியாளரான அலெக்ஸ்சாண்ட ஹெல்டுவுக்கு 16லட்சத்திற்கான காசோலையை வழங்கி அவருக்கு "Employee of the Decade" என்கிற பட்டத்தையும் வழங்கியுள்ளார்.
நல்ல சம்பளம் இருக்கும் நிறுவனங்களில் கூட சிறிய அளவிலான சம்பள உயர்விற்கு ஆசைப்பட்டு பலரும் வேறு நிறுவனங்களுக்கு அடிக்கடி மாறும் சூழலில் அலெக்ஸ்சாண்டர் ஹெல்டுவின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.