Pushpa 2 திரைப்படத்தை வெளிநாட்டில் கொண்டாடிய ரசிகர்கள் என பரவும் வீடியோ - உண்மையா?
This News Fact Checked by ‘Telugu Post’
புஷ்பா 2 திரைப்படத்தின் காட்சியை திரையில் கண்ட வெளிநாட்டு ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரத்தில் ஈடுபட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா 2: தி ரூல்" திரைப்படம் வெளியான 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 1,292 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி தெலுங்கில் வெளியான நிலையில் ஹிந்தி, தமிழ், கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டியது.
இப்படத்தின் வசூலில் பெரும் சாதனை படைத்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், புஷ்பா-2 படத்தின் காட்சி ஒன்று பெரிய திரையில் காண்பிக்கப்பட்டு வருகிறது. காணொளியை பார்த்ததும் கூட்டம் மகிழ்ச்சியில் சத்தமிட்டு ஆரவாரம் செய்வதை காணலாம். இந்த வீடியோவிற்கு, கீழே "வெளிநாட்டு திரையரங்குகளில் புஷ்பா படத்தை பார்த்துவிட்டு உற்சாகமாக ஆரவாரம்" என்ற தலைப்பில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் பயனரான``சச்சின் மிட்டல்'' தனது கணக்கில் ``எடிட்டிங் கியா ஹை'' என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம்
இதேபோல டிசம்பர் 11, 2024 அன்று, ``முகேஷ் மீனா'' என்ற யூடியூப் கணக்கு வைத்திருப்பவர், ``புஷ்பா 2-ன் திரைப்படத்தின் நம்பமுடியாத தாக்கம்'' என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
உண்மைச் சரிபார்ப்பு :
இந்த பதிவு குறித்த உண்மைச் சரிபார்ப்பில் வைரலாகும் பதிவு சமூக ஊடக பயனர்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்தின் கிளிப்பிங்ஸைப் பயன்படுத்தி கால்பந்து போட்டியின் வீடியோ எடிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
வைரலான வீடியோ குறித்த உண்மைகளைக் கண்டறிய, வீடியோவில் உள்ள சில முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மற்றும் சில முக்கிய வார்த்தைகள் மூலம் தேடினோம். தேடலில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2016 ஆம் ஆண்டில், ``ஹார்ட் நியூஸ் வெஸ்ட் கன்ட்ரி'' என்ற யூடியூப் சேனல், `` பிரிஸ்டலில் உள்ள ஆஷ்டன் கேட் ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள், யூரோவில் வேல்ஸுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளதைக் காணலாம். இந்த காணொலியை பார்க்கும் போது ஒரு பெரிய திரையில் கால்பந்து போட்டி நடப்பதை காணலாம். இந்த வீடியோவில், புஷ்பா 2 படத்தின் ஒரு காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளது தெளிவாகிறது.
இதேஓல யூரோ 2016 கால்பந்து போட்டி - இங்கிலாந்து அணி வெற்றியைக் காண ஆஷ்டன் கேட்டில் ஆரவாரம்' என்ற தலைப்பில் ʼபிரிஸ்டல் சிட்டி' இணையதளத்தில் ஒரு செய்தி அறிக்கையை பார்க்கலாம் . இங்கிலாந்து vs வேல்ஸ் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஆஷ்டன் கேட் மைதானத்தில் குவிந்த காட்சி இது. இங்கு போட்டி நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். இந்த அறிக்கை 17 ஜூன் 2016 அன்று வெளியிடப்பட்டது. அசல் வீடியோவையும் இங்கே பார்க்கலாம்.
மேலும் ``பிபிசி பிரிஸ்டல்'' முகநூல் கணக்கில், ``இங்கிலாந்து ரசிகர்கள் வேல்ஸுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்'' என்ற தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டிருப்பதைக் காணலாம்.
இதேபோல ஜூன் 16, 2024 அன்று, ʼ ITV ʼ இணையதளத்தில் ʼ பிரிஸ்டல் கால்பந்து ரசிகர்கள் இங்கிலாந்து வெற்றி கோலை அடித்தவுடன் ஆரவாரத்தில் கொண்டாடினர். யூரோ போட்டியின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியுடன் விளையாடுவதைக் காண நூற்றுக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் பிரிஸ்டலின் ஆஷ்டன் கேட் மைதானத்தில் திரண்டதாக கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் போட்டியைக் காண ஊழியர்களுடன் வந்து தங்களுடைய நேரத்தைச் செலவிட்டன. சமூக வலைதள பயன்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த வைரலான வீடியோ செயல்படுகிறது என்பதை இது நிரூபிக்கிறது. கால்பந்து போட்டியின் வீடியோவிற்கு பதிலாக புஷ்பா 2 படத்தின் கிளிப்பிங்கை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டு வைரலாக பரவியது.
முடிவு :
புஷ்பா 2 திரைப்படத்தின் காட்சியை திரையில் கண்ட வெளிநாட்டு ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரத்தில் ஈடுபட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதனை ஆய்வு செய்ததில் கால்பந்து போட்டியை திரையில் காண கூடியிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்யும் வீடியோவில் புஷ்பா 2 திரைப்படத்தின் காட்சிகள் எடிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு சமூக வலைதள பயனர்கள் தவறாக வழிநடத்துகிறது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.