விண்வெளியில் காணப்படும் தனித்துவமான கிறிஸ்துமஸ் மரம்; ஆச்சரியப்படுத்தும் புகைப்படத்தை பகிர்ந்த நாசா!...
கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்ற நட்சத்திரக் கூட்டத்தின் நம்பமுடியாத புதிய புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், விண்வெளியில் கிறிஸ்துமஸ் மரம் தெரியும் வகையில், நாசா மிகவும் சிறப்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல முறை இதுபோன்ற போலி புகைப்படங்கள் வைரலாகின்றன. அவை நாசாவால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால் இந்த முறை நாசா உண்மையில் அதை தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து பகிர்ந்துள்ளது.
பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 2264 என்ற சிறிய நட்சத்திரங்களின் தொகுப்பை படம் நாசா வெளியிட்டுள்ளது. அவற்றின் வடிவம், கிறிஸ்துமஸ் மரம் போன்ற இருந்தது. வெள்ளை மற்றும் நீல நட்சத்திரங்கள் இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் அலங்காரம் போல் தெரிகிறது.
இந்த கிளஸ்டரை 'கிறிஸ்துமஸ் ட்ரீ கிளஸ்டர்' என்றும் அழைப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த நட்சத்திர கொத்து பூமியில் இருந்து 2,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.இந்த படத்தை நாசா வெவ்வேறு தொலைநோக்கிகளின் உதவியுடன் படம்பிடித்துள்ளது.