சென்னை OMR சாலையில் இறந்து கிடந்த திருநங்கை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
சென்னை OMR சாலை அருகே கடந்த மாதம் இறுதியில் திருநங்கை உடல் அழுகிய
நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக உடனிருந்த நான்கு
திருநங்கைகள் கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய
குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 21-வயதான சிமி (எ) சாதனா. திருநங்கையான இவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மகளை காணவில்லை என சாதனாவின் தாயார் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சாதனைவை தேடியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி நண்பகல் OMR சாலை செம்மஞ்சேரி பகுதியில், முட்புதர் ஒன்றில் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல்
தெரிவித்துள்ளனர்.
உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அந்த உடல் காணாமல் போன திருநங்கை சிமி (எ) சாதனாவா என்பதை உறுதி செய்ய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அடையாளம் காண்பித்தனர். பின்னர், அங்க அடையாளத்தை பார்த்த சிறுமியின் சகோதரிகள் அழுகிய நிலையில் இருப்பது காணாமல் போன திருநங்கை சிமி என்பதை உறுதி செய்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 4 திருநங்கைகள் சிமி இறந்து கிடந்த இடத்தில் இருந்து ஓடுவது பதிவாகி இருந்தது. நண்பர்கள் போல் பழகி எனது மகளை அழைத்து சென்று கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர் என சாதனாவின் தாய் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி 60 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்த ஐந்து திருநங்கைகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசாரை அதிரவைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் திருநங்கை சிமி (எ) சாதனாவை அபர்ணா(27), ஆனந்தி(35), ரதி(36), அபி(32)
ஆகிய நான்கு திருநங்கைகளுக்கும் இணைந்து கேலி செய்துள்ளனர். இதனால்
இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த திருநங்கைகள் சாதனாவை
மாந்தோப்பில் அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.