Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!

10:24 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நிகழ்வுகளில் பங்கேற்க வால்பாறை காடர் இன தம்பதி ராஜலட்சுமி - ஜெயபால்‌ ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

Advertisement

ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.  தனது கிராமத்தை இந்தியாவில் மிக சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். அவருடைய செயலுக்கு பக்கபலமாக இருந்து வழி காட்டியவர் இவரது கணவர் ஜெயபால்.

இவர்களது செயலை பாராட்டு விதமாக இருவரும் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க தமிழ்நாடு அரசால் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

விமானம் மூலம் இம்மாதம் 22 ம் தேதி டெல்லி செல்லும் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிப்ரவரி 2 ம் தேதி தமிழ்நாடு திரும்புகின்றனர்.  காடர்‌ பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் முக்கியத்துவம்‌ வாய்ந்த இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இருப்பதால்  ஆனைமலைத்தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
75th Republic DayHonourtribal people
Advertisement
Next Article