காலாவதியான முறுக்கை விற்ற சூப்பர் மார்க்கெட் | ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காலாவதியான முறுக்கை சாப்பிட்டவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வழக்கில் ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் அதே ஊரில் உள்ள ஆண் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 2 முறுக்கு பாக்கெட் 90 ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
அந்த முறுக்கைச் சாப்பிட நிலையில் செல்லத்துரைக்கு அவர் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. பின்னர் அந்த முறுக்கு பாக்கெட் காலாவதியானது தெரியவந்துள்ளது.
இது குறித்து செல்லத்துரை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து நீதிபதி சக்கரவர்த்தி சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் முறுக்கு விலை 90 ரூபாயை திரும்ப தர வேண்டும் எனவும், மன உளைச்சலுக்கு 5000 ரூபாயும் , வழக்கு செலவுக்கு 5000 செலுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கவும், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கவும் உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.