Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் - விபத்து வழக்காக மாற்றம்!

01:29 PM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

நாகை மீனவர்களின் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான
விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மதி,  ராஜேஷ் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 21
ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  அன்று நள்ளிரவு 1 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை தாண்டி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.  அப்போது
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இலங்கை கடற்படை கப்பலில் இருந்த வீரர்
ரத்நாயக்க கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அவரை மீட்ட
கடற்படையினர் காங்கேசன் துறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரத்நாயக்க உயிரிழந்தார்.  இதனையடுத்து நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்தது.  மேலும் இலங்கை கடற்படையினர் அளித்த புகாரின் பேரில் நாகை மீனவர்கள் 10 பேரின் மீதும் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நாகை மீனவர்களின் படகில் இலங்கை கடற்படை கப்பல் வந்து தானாக மோதியதாக விசைப்படகின் ஓட்டுநர் தெரிவித்தார்.  மேலும் கடற்படை கப்பல் மோதியதற்கு பிறகு தான் தங்களுக்கு தெரியும் எனவும்,  ஓட்டுநர் மட்டுமே படகை இயக்கிய நிலையில் மற்ற 9 பெரும் உறங்கியதாகவும் மீனவர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

தொடர்ந்து உயிரிழந்த கடற்படை வீரரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கியதால் உயிரிழந்ததாக அறிக்கை கிடைக்கப் பெற்றதால், கொலை வழக்காக அல்லாமல் விபத்து வழக்காக மாற்ற காங்கேசன்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அடுத்த மாதம் 8-ம் தேதி வரை மீனவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Kankesan Policemurder caseSrilankaTamilnadu Fishers
Advertisement
Next Article