For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய ஜேடியு | மீண்டும் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமார்...

11:42 AM Jan 28, 2024 IST | Web Editor
இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய ஜேடியு   மீண்டும் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமார்
Advertisement

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர வி அர்லேகரிடம் அளித்தார்.  நிதிஷ் குமாரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராகத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

நிதிஷ் குமார் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ராஜினாமா செய்த நிலையில் இன்று  மாலைக்குள் பாஜக ஆதரவுடன் புதிய அரசு அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ஆர்ஜேடிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்களும், , காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏக்களும், CPI (M-L) கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்களும், CPI(M) மற்றும் CPI கட்சிகளுக்கு தலா 2 எம்.எல்.ஏக்களும்,  மதசார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்லளும், AIMIM  கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் உள்ளனர்.

தனது ராஜினாமாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், அரசியல் சூழல் காரணமாகவே லாலு உடனான கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாகவும் கூறி உள்ளார்.

Advertisement