இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக நில அதிர்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதில் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இது இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் டோபெலோவிற்கு மேற்கே 94 கி.மீ(58 மைல்) தொலைவில் 116 கி.மீட்டர்(72 மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளது.
மேலும், இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, கடந்தாண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 331 பேர் கொல்லப்பட்டனர், மேலும், 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.