For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெற்றிகரமான 35வது நாள் - வசூல் குவிக்கும் மகாராஜா...!

01:58 PM Jul 07, 2024 IST | Web Editor
வெற்றிகரமான 35வது நாள்   வசூல் குவிக்கும் மகாராஜா
Advertisement

‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான் இப்படம் 25 நாட்களை கடந்து உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

Advertisement

பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது.  நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப்,  மம்தா மோகன்தாஸ்,  நட்டி, முனிஷ்காந்த்,  சிங்கம் புலி,  பாரதிராஜா,  வினோத் சாகர்,  பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.  கடந்த 14 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான் இப்படம் 25 நாட்களை கடந்து உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இப்படம் ஜூலை 19ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement