Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வலுக்கும் கோரிக்கை!

05:23 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை அளித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, துணை நடிகைகளான ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், நடிகர் சித்திக்கின் மேல் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது

தற்போது, ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என கேரளத் திரைத்துறை தொழிலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த கேரளத் திரைத்துறை தொழிலாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“இப்பிரச்னையைக் கண்டு நாங்கள் அமைதியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எங்களால் எதையும் சொல்ல முடியாது. ஹேமா கமிட்டி அறிக்கையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களின் பெயர்களைப் பொதுவெளியிலும் தெரியப்படுத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் யாரும் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்பவர்களை சகித்துக்கொண்டிருக்க மாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளது.

Tags :
Actor DileepJustice Hema Committee reportMalayalam film industrynews7 tamilNews7 Tamil UpdatesSexual assaultSexual harassment
Advertisement
Next Article