For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! - தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ!

01:56 PM Jun 14, 2024 IST | Web Editor
இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்     தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ
Advertisement

தண்ணீரில் ஊர்ந்த வித்தியாசமான பச்சை நிற உயிரினம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

கதைகளிலும் திரைப்படங்களிலும் பிரமாண்டமானதாக சித்தரிக்கப்படும் டிராகன்கள் இன்றைய நவீன உலகில் சாதாரமான ஒரு உயிரினம்.  அறிவியல்பூர்வமாக முற்காலத்தில் டிராகனங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இன்று வரை அறிவியல் ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில்,  காண்போருக்கு குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தின் வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.  இது தொடர்பாக வீடியோ பதிவு ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின்படி ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அந்த வீடியோவில்,  நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன்.  அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.

இந்த வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு ஆகும். ஆனால் மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொண்ட இந்த டிராகன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement