கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் சிறப்பு லோகோ - அஜித் முடிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் பந்தய போட்டிகளிலும் ஆர்வம் கொண்டு கார்பந்தய வீரராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கினார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார். இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற அச்சிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.