”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!
நெல்லையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி மென்பொறியாளர் கவின்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கொலையாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்த்திதார். அப்போது பேசிய அவர்,
”ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வி.சி.க சார்பில் வரும் ஆகஸ்ட் 9 மற்றும் 11 ஆகிய இரண்டு தினங்கள் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், ”தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாக உருவாகவில்லை. பாஜக அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்துள்ளன. அந்த கூட்டணியில் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி வருவது அவர்களின் உறுதிப்பாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது”
என்று தெரிவித்தார்.