குத்தாலம் உக்தவேதிஸ்வரர் ஆலயத்தில் உத்தால மரத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்!
குத்தாலம் உக்தவேதிஸ்வரர் ஆலயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய ஸ்தல விருட்சமான உத்தால மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான
உக்தவேதிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்தது. சைவ சமயக் குரவர்கள் 3 பேரால் பாடல்பெற்று புகழ்
பெற்ற இந்த ஆலயம் சுந்தரர் பெருமான் சரும நோய் தீர்த்த இடமாகும்.
இதையும் படியுங்கள்: மயிலாடுதுறை அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் குரு பூஜை விழா!
மேலும் தலவிருட்சமான உத்தால மரத்தின் பெயரால் குத்தாலம் என்ற பெயர் காரணம் கூறுவதாக புராண வரலாறு கூறுகின்றது. தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 100-வது ஆலயமாக இது போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் உத்தாலமரம், பங்குனி கடைசி வாரத்தில் பூ பூத்து சித்திரை முதல் வாரத்தில் ஒருமுறை மட்டுமே 10
நாட்களில் பூத்து விடுகிறது.
தொடர்ந்து வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே பூக்கும் இந்த பூக்கள் காய்ப்பதில்லை. எனவே இதிலிருந்து புதிய விருட்சங்கள் உருவாக முடியாமல் இந்த ஆலயத்தில் மட்டுமே ஒரே ஒரு மரம் இருக்கின்றது. கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று (டிச.15) உத்தால மரத்திற்கும், மணவாளநாதர்க்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.