பேராசிரியர் “பாடம்” எடுப்பதை கவனிக்க வந்ததா? ஏசி வழியாக வந்து எட்டிப்பார்த்த பாம்பால் தெறித்து ஓடிய மாணவர்கள் - #ViralVideo!
டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வகுப்பறை வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மழைக் காலங்களில் பாம்புகள் வறண்ட இடங்களைத் தேடி அலையும். நொய்டாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. காலையிலேயே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. பேராசிரியர் சாஹிப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சில மாணவர்களின் கண்கள் ஏசி மீது விழுந்ததால் வகுப்பில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து ஒரு கருப்பு நிற பாம்பு மெதுவாக வெளியே வந்து கொண்டிருந்தது. வகுப்பில் பாம்பு நுழைந்தததும் வளாகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்கினர்.
நொய்டாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வீடியோ @gharkekalesh X கணக்கில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு வகுப்பறையின் காட்சி காட்டப்பட்டுள்ளது. வகுப்பின் போது, திடீரென ஏசி காற்றோட்டத்தில் இருந்து பாம்பின் வாய் வெளியேறியது. வகுப்பறைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.