For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!

07:43 AM Nov 12, 2023 IST | Student Reporter
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை  சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால்,  பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் எதிரிலியாக பூக்களின் விலை சற்று உயர்ந்தது.

பூக்கள் விலை நிலவரம்:

ஐஸ் மல்லி கடந்த வாரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 ரூபாய் அதிகரித்து 1000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பங்கி பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:தீபாவளி ஸ்பெஷல்… குழந்தைகள் அதிகம் விரும்பும் ஸ்டார்டர்கள்!

முல்லை மற்றும் ஜாதி மல்லி கடந்த வாரம் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் அதிகரித்து 850 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகறது. பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரளிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து நிலையில் இன்று 150 ரூபாய் அதிகரித்து இன்று 250 ரூபாயாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகாம்பரம் 800 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் அதிகரித்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாமந்திப்பூ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 20 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்டு மல்லி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 20 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement