For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழக-கேரள எல்லை அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை உயிரிழப்பு!

10:57 AM May 04, 2024 IST | Web Editor
தமிழக கேரள எல்லை அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை உயிரிழப்பு
Advertisement

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றைக்
காட்டு யானைக்கு உடல்நலக் குறைவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

Advertisement

தென்காசி மாவட்டம்,  தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அருகே பகவதிபுரம் ரயில் நிலையம் உள்ளது.  இந்த ரயில் நிலையம் அருகே கிருஷ்ணன் என்பவரின் தோட்டம் உள்ளது.  இத்தோட்டத்தில் நேற்று அதிகாலையிலிருந்து வெகுநேரமாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது.  இதனை பார்த்தோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலறிந்து அங்கு வந்த  வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால்,  எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் பயப்படாத காட்டுயானை அந்த இடத்திலேயே நீண்ட நேரம் நின்றுள்ளது.  அதனைத்தொடர்ந்து,  யானைக்கு ஏதோ உடல் ரீதியான பிரச்சனை இருப்பதை உணர்ந்து கொண்ட வனத்துறையினர்,  கால்நடை மருத்துவ குழுக்களை வரவழைத்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்தனர்.  தொடர்ந்து, நின்று கொண்டிருந்த யானை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில்,  நீண்ட நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

யானையை  மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில்,
எந்தவிதமான சிகிச்சையும் பலன் அளிக்காமல் யானை உயிரிழந்துள்ளது.  இதனையடுத்து யானையின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வேறு ஏதேனும் நோய் தொற்றுக்கு  ஆளாகியதா? என்பது குறித்து உடற் கூராய்வு பரிசோதனைக்கு பின்பு தான் தெரிய வரும் எனவும், உடற்கூறாய்வு பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement