Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

11:12 AM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து யானை கூட்டங்கள் இந்த வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைக் கூட்டங்கள் பெரிதளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறவில்லை.

வனப்பகுதியில் கூட்டத்தை விட்டு பிரிந்த ஒரு சில யானைகள் அவ்வப்போது மழையற்ற காலங்களில் தண்ணீர் தேடி பென்னாகரம் ஒகேனக்கல் சாலையை கடந்து அங்குள்ள குட்டைகளை தேடி செல்கின்றன. இந்நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது ஒற்றை யானை தண்ணீர் தேடி சுற்றி வருகிறது.  முண்டச்சி பள்ளம் தடுப்பணையில் தண்ணீர் அருந்தும் இந்த யானை, உணவு தேடி பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலையில் சுற்றித் திரிகிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பயணிக்கும் போது சாலை ஓரத்தில் நின்றிருக்கும் யானையை கண்டதும்,  அதன் அருகில் சென்று செல்பி எடுப்பது, ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மனமுடைந்த விராட் கோலி; அன்புடன் அரவணைத்த அனுஷ்கா!

இதனால் ஒற்றை யானை மிரண்டு சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளதால்,  வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
DharmapuriElephantforestForestDepartmenthogenakkalNews7Tamilnews7TamilUpdatesselfietouristtravelWaterfalls
Advertisement
Next Article