சினிமா டயலாக்குடன் விஜய் சொன்ன குட்டிக்கதை!
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் தனது பேச்சுக்கிடையே குட்டி கதை ஒன்றை கூறினார். அது அவரது தொண்டர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், தொண்டர்களுக்கு ஒரு குட்டிக்கதையை சொல்லி கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.
விஜய் தனது 45 நிமிட பேச்சில் ஒரு குட்டிக்கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அதாவது, ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. அதிகாரமிக்க (பவர் ஃபுல்லான) தலைமை இல்லாததால் சிறு குழந்தையின் கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம். அதனால் அந்த நாட்டுல இருந்த பெரும் தலைவர்கள் பயத்தில் இருந்தார்களாம். அந்த சிறு குழந்தை நாட்டின் படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘போர்க்களம் போகலாம்’ என சொன்னதாம்.
அப்போது அந்த பெருந்தலைவர்கள், நீ சிறு குழந்தை என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த சிறு குழந்தை என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியுள்ளார்கள்.. ஆனால் கெட்ட பய சார் அந்த சிறு குழந்தை…” என்றார். நம்மை நம்பி, செயல்பாட்டை நம்பி நம்மோடு சிலபேர் வரலாம் இல்லையா? அதுக்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அவங்களையும் அன்போட அரவணைக்கனும் இல்லையா? நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துதான் பழக்கம். நம்மை நம்பி நம்மோடு களமாட வருகிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும்.. என்றார் விஜய்.