For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்... என்ன நடந்தது தெரியுமா?

03:33 PM Jun 08, 2024 IST | Web Editor
கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்   மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்    என்ன நடந்தது தெரியுமா
Advertisement

பெண் ஒருவர் தனது ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை மீட்புக் குழு மற்றும், காவல்துறையினருடன் இணைந்து 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

Advertisement

மக்கள் பெரும்பாலும் விடுமுறைக்காக சிறந்த இடங்களுக்குச் செல்கிறார்கள்,  அங்கு அவர்கள் அமைதியைக் காண்கிறார்கள்.  மக்கள் தங்கள் விடுமுறையை மறக்கமுடியாததாக மாற்ற பல்வேறு விஷயங்களைச் செய்கிறார்கள்,  ஆனால் உங்கள் விடுமுறைக்கு இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது?

ஆம்,  கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறையைக் கழிக்க கேரளா சென்றிருந்தார்.  அங்கு அவர் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை தொலைத்துவிட்டார். கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளின் மேல் நின்று அலைகளை ரசித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.  நீண்ட நேரமாக தனது போனை கண்டுபிடிக்க முயன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் நடந்த முழு விபரத்தையும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து,  அந்த பெண் தங்கியிருந்த ரிசார்ட் ஊழியர்கள்,  கேரள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அலைகள் மற்றும் பாறைகளை கடந்து அவரது போனை கண்டுபிடித்தனர்.
பலமுறை முயற்சித்தும் வெளியே எடுக்க முடியவில்லை. காற்று மற்றும் மழையுடன் கூடிய பலத்த அலைகள் நிலைமையை சவாலாக மாற்றியது.  இருப்பினும்,  அன்டிலியா பங்களா குழு மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 7 மணி நேரம் போராடி மொபைல் போனை மீட்டனர்.  இந்த உதவிக்கு சுஹைல் மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு ஆன்டிலியா ஹாஸ்டல் நன்றி தெரிவிக்கிறது.
Tags :
Advertisement