For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இதயம் 50 நிமிடம் துடிப்பதை நிறுத்தியும் உயிர்பிழைத்த மனிதர்! எங்கு நடந்தது இந்த அதிசய சம்பவம்?

10:23 AM Mar 02, 2024 IST | Web Editor
இதயம் 50 நிமிடம் துடிப்பதை நிறுத்தியும் உயிர்பிழைத்த மனிதர்  எங்கு நடந்தது இந்த அதிசய சம்பவம்
Advertisement

இங்கிலாந்தில் 50 நிமிடங்கள் இதயம் துடிப்பதை நிறுத்திய பிறகும், ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர்,  பார்ன்ஸ்லி நகரில் வசித்து வருபவர் 31 வயதான பென் வில்சன்.  இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது வருங்கால மனைவி ரெபெக்கா ஹோம்ஸ் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  ஆனால் ஆம்புலன்ஸ் வரும்வரை ரெபெக்கா அவருக்கு கார்டியோபுல்மோனரி புத்துயிர் கொடுத்துள்ளார்.  இதனையடுத்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்துள்ளனர். ப ரிசோதனையில் அவர் கோமாவுக்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பின் அவரது உடல்நிலை சீராக இல்லை எனக்கூறிய மருத்துவர்கள் அவரது இதய இதயதுடிப்பிற்காக 40 நிமிடங்களில் 11 முறை டிஃபிபிரிலேட்டர் கருவியை  பயன்படுத்தியுள்ளனர்.  தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் ஆறு முறை ஷாக் சிகிச்சை கொடுத்துள்ளனர்.  50 நிமிடங்களுக்கு பிறகு இதயதுடிப்பு திரும்பியுள்ளது. இதன்பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின் வேறொரு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வில்சனுக்கு மாரடைப்பு,  சிறுநீரக செயலிழப்பு,  ரத்த உறைவு மற்றும் வலிப்பு போன்ற பல உடல் பிரச்னைகள் இருந்தபோதிலும் 5 வாரங்களுக்கு பின் இவர் கோமாவிலிருந்து வெளிவந்துள்ளார்.  இவர் தனியாக எழுந்து நின்று பேசியும் உள்ளார். இந்த செயல் மருத்துவர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு வில்சனின் காதலியான பென்னின் உறுதிப்பாடும் ஒரு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தற்போது இருவரும் தங்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.  50 நிமிடங்களுக்கு பின் இதயதுடிப்பு திரும்பி வில்சன் உயிர்பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement