அமெரிக்காவில் இந்திய கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பேரணி! கவனம் ஈர்த்த தமிழ் பாரம்பரிய கலைகள்!
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற இந்திய கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பேரணியில் நிகழ்த்தி காண்பிக்கப்பட்ட தமிழ் பாரம்பரிய கலைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வாஷிங்டன் மாகாணம் Seattle நகரில் நடைபெற்ற இந்திய கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பேரணியில் ஒவ்வொரு மாநிலம் சார்பாக அலங்கார வாகனப் பேரணி நடைபெற்றது.
இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் மாநிலத்தின் கலைக் கலாச்சாரம் உடைப் போன்ற பல வித சிறப்பம்சம் காட்டும் விதமாக அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பாக Seattle தமிழ்ச் சங்கம் மற்றும் ஸ்டார்க் கலைக்குழுவும் இணைந்து Seattle தமிழ்ச் சங்கம் President ஜேசு மற்றும் ஒருங்கிணைப்பாளர்ப் பிரேம் மற்றும் பானு தலைமையில் தமிழ்நாட்டின் பெருமையை விளக்குமாறு சிலம்பம் ,கரகம், அடிமுறைப் போன்ற கலைகளைச் செய்து காட்டினார்கள்.
அதுமட்டுமின்றிக் கருப்பு சிவப்பு நிறம் வாகனத்தில் தமிழ் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாரும், தமிழ்ப் பாரம்பரிய உடைகளில் ஆண் பெண் பதாகையும், காளை மாடு பதாகையும், மற்றும் திருவள்ளுவர் சிலையோடும் பேரணியில் கலந்து கொண்டனர். இதை ஆயிரக்கணக்கானோர்க் கண்டுகளித்தனர்.