For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்காசி | ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - என்ன நடந்தது தெரியுமா?

தென்காசி மாவட்டம் குளத்தின் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டி மலைப்பாம்பு விழுங்கியது.
11:00 AM Jan 17, 2025 IST | Web Editor
தென்காசி   ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு   என்ன நடந்தது தெரியுமா
Advertisement

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைக்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது ஆட்டுக்குட்டியானது இடைகால் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த பெரிய அளவிலான ராட்சத மலை பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை விழுங்க முயற்சி செய்துள்ளது.

Advertisement

அப்போது, ஆட்டுக்குட்டி சத்தமிடவே முருகன் சென்று பார்த்த போது, பெரிய
அளவிலான மலை பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை விழுங்க முயற்சி செய்து
கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது தொடர்பாக கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே தகவலின் அறிந்து, விரைந்து வந்த கடையநல்லூர் வனத்துறையினர் ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்த போது, ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு அங்கே விட்டுவிட்டு அருகில் உள்ள குளத்திற்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், ஆட்டுக்குட்டியானது உயிரிழந்தது. ஆட்டுக்குட்டியை மீட்டு
உடற்கூறாய்வு சோதனைக்காக வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், உயிரிழந்த ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தேவையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெறும் அச்சத்தை ஏற்பட்டது.

Tags :
Advertisement