தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Boom’
சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் முகத்தில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் இந்தப் படம் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. வைரலான செல்ஃபியில் சைஃப் அலிகானின் முகத்தில் பல காயங்கள் உள்ளன.
இது தவிர, அவரது ஒரு கண்ணிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியான 'லால் கப்தான்' படத்தில் சைஃப் அலி கான் நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தை வைரல் படம் காட்டுவதாக BOOM கண்டறிந்துள்ளது. இதற்கும் சமீபத்திய தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது
ஜனவரி 16 அன்று நடிகர் சயீஃப் அலி கான் தனது பாந்த்ரா வீட்டில் தாக்கப்பட்டார் இந்த தாக்குதலில் அவருக்கு ஆறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கொள்ளை நோக்கம் மட்டுமே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசாரின் துரித விசாரணைக்கு பிறகு மும்பை தானேயைச் சேர்ந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர் சைஃப் அலி கான் மீதான தாக்குதலால் ஏற்பட்ட காயம் என ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
உண்மை சரிபார்ப்பு :
சைஃப் அலி கான் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிறகு இது தொடர்புடைய ஊடக அறிக்கைகள் மூலம், அவரது குழுவோ, குடும்பத்தினரோ இதுவரை எந்தப் படத்தையும் வெளியிடவில்லை என்பதைக் கண்டறிந்தோம். இது தொடர்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அக்டோபர் 8, 2019 அன்று X இல் வெளியிடப்பட்ட அதே செல்ஃபியைக் கண்டறிந்தோம். இந்தப் பதிவில் 'லால் கப்தான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் என பகிரப்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்த படம் 2019 முதல் இணையத்தில் உள்ளது என்பதும், சமீபத்தில் சைஃப் மீதான தாக்குதலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகியது. 8 அக்டோபர் 2019 தேதியிட்ட அமர் உஜாலா மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கைகளிலும் இந்தப் படம் உள்ளது . அறிக்கையின்படி, இது சைஃப் அலி கான் நடித்த 'லால் கப்தான்' படத்தின் கதாபாத்திரம் என்பது தெளிவாகிறது. இந்த படத்தில் அவர் சாதுவாக நடித்திருந்தார். சைஃப்பின் முகத்தில் உள்ள காயங்கள் உண்மையானவை அல்ல, ஆனால் அவரது கதாபாத்திரத்தின் தோற்றம் என்றும் இந்த அறிக்கைகளில் தெளிவாகக் காண முடிகிறது.
இந்த படத்தில் சைஃப் தவிர, தீபக் டோப்ரியால் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'லால் கப்தான்' 18 அக்டோபர் 2019 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஃபிலிம்பேர் மற்றும் இந்தியா ஃபோரம் இணையதளங்களிலும் இப்படத்தைப் பார்க்கலாம் . இதேபோல இப்படத்தில் சைஃப்பின் தோற்றமும் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' உரிமையாளரின் ஜானி டெப்பின் தோற்றத்துடன் ஒப்பிடப்பட்டது .
முடிவு :
சயீப் அலி கான் மீதான தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலானது. இதுகுறித்து BOOM உண்மை சரிபார்ப்பில் வைரல் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. இந்த புகைப்படம் 'லால் கப்தான்' படத்தில் சைஃப் அலிகான் நடித்த கதாபாத்திரத்தின் தோற்றம் எனவும் இது படம் 2019 இல் வெளியானது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.