For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!

07:15 PM Jan 11, 2024 IST | Web Editor
சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்
Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Advertisement

சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுபோன்று தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரமாக தூங்குபவர்களுக்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி போர்வை வழங்கி அரவணைத்து உள்ளார்.

நேற்று முந்தினம் இரவில் சீருடையுடன் தனது பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ரோட்டோரமாக தூங்கிய 25 பேருக்கு போர்வையை போர்த்திவிட்டார். இதில் பலர் தங்களது மீது போர்வை போர்த்தப்பட்டது கூட தெரியாமல் கடும் குளிரிலும் அயர்ந்து தூங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்த போது தான் தங்களது உடல் மீது இரவில் யாரோ போர்வையை போர்த்திவிட்டு சென்றதை உணர்ந்தனர். 

இன்ஸ்பெக்டர் முகமது புகாரியின் இந்த மனிதநேய செயலை அவருடன் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் செலோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிஉல் பரவு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகளும், இன்ஸ்பெக்டர்களும் முகமது புகாரியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் முகமது புகாரியின் இந்த செயலை பெருநகர சென்னை காவல்துறை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பகிர்ந்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement