For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி - சூப்பரான ஆஃபரை அறிமுகப்படுத்திய தனிஷ்க்!

நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சூப்பரான ஆஃபரை தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
03:14 PM Jun 12, 2025 IST | Web Editor
நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சூப்பரான ஆஃபரை தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி    சூப்பரான ஆஃபரை அறிமுகப்படுத்திய தனிஷ்க்
Advertisement

டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சூப்பரான ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

பழைய தங்கத்திற்குப் பதிலாக புதிய தங்கத்திற்கு 2 காரட் வரை கூடுதல் மதிப்பைப் பெறலாம். இச்சலுகை ஜூன் 30, 2025 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க், முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்றச் சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது. இச்சலுகையானது வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு* [up to 2 Karat extra value*] பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

ஜூன் 30, 2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறும் வாய்ப்பளிக்கிறது:

• தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாகப் பெறுங்கள். [1KT extra on old gold]

• வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாகப் பெறுங்கள். [2KT extra on old gold]

உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT = 21KT ஆகவும், வைர பதிக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT = 22KT ஆகவும் கூடுதல் மதிப்புடன் வாங்க முடியும். நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய தங்கத்தின் ஒவ்வொரு காரட்டிற்கும் அதிக மதிப்பை இச்சலுகை வழங்குகிறது. இந்த சலுகை தனிஷ்க் அல்லாத நகைக்கடைக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர்கள் நவநாகரீகமான, மிக நுணுக்கமான, முறையில் வடிவமைக்கப்பட்ட தனிஷ்க் நகைகளுக்கு தரம் மேம்படுத்தும் போது, அவர்களது நகைகளுக்கு கூடுதல் மதிப்பை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிஷ்கின் தங்கப் பரிமாற்றக் கொள்கை [Tanishq’s Gold Exchange Policy], ஏற்கனவே தங்களது பழைய நகைகளை தங்களுடைய பாணி மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆபரணங்களாக பரிமாற்றம் செய்த 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகமான தீர்வாக அமைந்திருக்கிறது. இந்த பரிமாற்ற செயல்முறை முற்றிலும் வெளிப்படையானது, தங்கத் தூய்மையை மதிப்பிடுவதற்கு காரட்மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும் போது மேலும் அதிகப் பலன்களைப் பெறுவதை உறுதிசெய்ய உத்தரவாதமான சிறந்த மதிப்பு வழங்கப்படுகிறது.

தனிஷ்க் உடன் நீங்கள் உங்களுடைய பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்து கொள்வது ஏன் சிறந்தது??

தங்க விலையில் அவ்வப்போது உண்டாகும் ஏற்ற இறக்கங்களாலும், வடிவமைப்பு விருப்பத்தேர்வுகள் தொடர்ந்து மாறி வருவதாலும், தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பழைய தங்க நகைகளுக்கு சிறந்த மதிப்பைப் பெறவும், நேர்த்தியான மற்றும் பிரமிப்பூட்டும் பல்வேறு வடிவமைப்புகளை எளிதில் வாங்கி பயனடையும் உதவுகிறது. தனிஷ்க் பிராண்டின் தங்கப் பரிமாற்றத் திட்டம் கீழ்கண்ட தேவைகள் மற்றும் எதிர்பார்புகளுக்கு பெரும் பலன்களை வழங்குகிறது:

• மணப்பெண்களுக்கான பிரத்தியேக நகைத்தொகுப்புகளுக்கு, தங்களது பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் மேம்படுத்த விரும்பும் திருமண வீட்டார் மற்றும் திருமண நகைகளை வாங்குபவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கிறது.

• தங்களிடம் ஏற்கனவே இருக்கும் பழைய தங்கத்திற்கு, அதிக மதிப்பை பெறும் வகையில் ஸ்மார்ட்டாக புதிய நகைகளை வாங்குபவர்கள்.

• தனிஷ்கின் தனித்துவமான, நுணுக்கமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வடிவமைப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

• சமீபத்திய நவீன போக்குகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களது நகைத்தொகுப்பைப் புதுப்பிக்க விரும்பும் ஃபேஷனில் முன்னோடித்துவமிக்க பெண்கள்.

இந்தச் சலுகையின் போது, ​​தூய்மை, நம்பிக்கை மற்றும் ஸ்டைலின் உத்தரவாதத்துடன் கூடிய தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட நகைகள், கிளாஸ் குந்தன், குண்டன் போல்கி, ஓபன் போல்கி, வண்ணக்கற்கள், இயற்கை வைரங்கள் [Gold Plain, Glass Kundan, Kundan Polki, Open Polki, Colour Stone, Natural diamonds] மற்றும் பல நகைத்தொகுப்புகளை உள்ளடக்கிய ஏராளமான வடிவமைப்புகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கலாம்.

தனிஷ்கில் பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்வதால் ஏன் பெரும் பலன்கள் கிடைக்கின்றன. முக்கிய காரணங்கள் 5:

1. வாடிக்கையாளர்கள் தங்களது தங்கத்திற்கு அதிகபட்ச பலனைப் பெறுவதை உறுதிசெய்ய தனிஷ்க் மிகச்சிறந்த மதிப்பை வழங்குகிறது.

2. இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைகளிலிருந்து வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க் ஏற்றுக்கொள்கிறது.

3. தங்க பரிமாற்றம் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செளகரியத்திற்கேற்ப வாங்கும் வசதியையும், வாய்ப்பையும்ம வழங்குகிறது.

4. மிகவும் நேர்த்தியான மற்றும் நுட்பமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கு தரம் மேம்படுத்தி கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு தனிஷ்க் வாய்ப்பளிக்கிறது.

5. தனிஷ்கின் நம்பகமான பிராண்ட் மரபு மற்றும் வெளிப்படையான பரிமாற்ற செயல்முறை, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித தொந்தரவில்லாத, நம்பிக்கையை வலுப்படுத்தும் அனுபவத்தை உறுதி செய்கிறது.
தங்க பரிமாற்றச் சலுகையானது, அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்டம், திருமண சீசன், முக்கிய மைல்கற்கள், பிறந்தநாள், ஆண்டுவிழாக்கள் மற்றும் பிற பண்டிகை நிகழ்வுகள் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதைத் திட்டமிடும் ஒரு முக்கிய நேரத்தில் வருகிறது. தங்களது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அணிந்து வருகின்ற ஆபரணங்களை, இன்றைய பாணிக்கு ஏற்ற வகையில் தனிப்பயனாக்கப்பட்ட திருமண நகைகளாக மாற்ற விரும்பும் மணமகளாக இருந்தாலும், சிறந்த மதிப்பைத் தேடும் புத்திசாலித்தனமான முதலீட்டாளராக இருந்தாலும், சமகால வடிவமைப்புகளுக்கு மேம்படுத்தும் போக்கு உணர்வுள்ள நகைப்ரியராக இருந்தாலும், அல்லது காலத்தால் அழியாத நேர்த்தியைத் தேடும் கைவினைத்திறனை அறிந்தவராக இருந்தாலும், இந்த தங்க பரிமாற்ற திட்டம் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறது. மிகவும் மென்மையான அல்லது பழைய தங்கத் நகைகளைக் கூட சமகால பாணியில், அன்றாடம் அணிவதற்கான நேர்த்தியுடன் மீண்டும் உருவாக்க முடியும். இது எந்தத் சிறு நகையாக இருந்தாலும் அதற்கான மதிப்பு என்பது உண்டு என்பதை நிரூபிக்கிறது. தனிஷ்கின் தங்கப் பரிமாற்றத் திட்டம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக உதவுகிறது. இதனால் எல்லைகளைக் கடந்து, கண்கவர் வடிவமைப்புகள், நுணுக்கமான விவரணங்கள் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியுடன் கூடிய உலகத்தை கொண்டாட அனைத்து தரப்பு பெண்களையும் தனிஷ்க் வரவேற்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement