For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ThugLife படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு!

03:44 PM Aug 25, 2024 IST | Web Editor
 thuglife படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு
Advertisement

நடிகர் சிம்பு பகிர்ந்த 'தக் லைஃப்' படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின்        34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் : மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட #TVK கொடி – 1000 பேருக்கு சமபந்தி விருந்து!

அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் இதுவரை நடந்த படப்பிடிப்புக்கான டப்பிங்கை கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இன்று ’தக் லைஃப் பணியில்’ எனக் குறிப்பிட்டு நடிகர் சிம்பு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement