நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு - குளிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!
தென்காசி அருகே குளத்திற்கு குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் திருமணமான இளைஞர் ஆவார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியில் உள்ள பாறை கிடங்கு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார். அவர் நீரின் ஆழமான பகுதிக்கு சென்றபோது அவர் அணிந்திருந்த ஆடை நீருக்குள் இருந்த முட்களில் சிக்கிய நிலையில் அவர் நீரில் மூழ்கினார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்க தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், கருப்பசாமி இன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்ப்டடது. அவரின் ஆடை நீருக்கடியில் உள்ள முட்களில் சிக்கிய நிலையில் அவர் மூச்சி திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.