‘குட் பேட் அக்லி’ த்ரிஷா கதாபாத்திரம் அறிமுகம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. இதில் அஜித் உடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித் உடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்க்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகை த்ரிஷா ரம்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
The ever charming @trishtrashers as #Ramya from the world of #GoodBadUgly ✨#GoodBadUgly grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment ❤🔥
#AjithKumar @MythriOfficial @Adhikravi @AbinandhanR @editorvijay @suneeltollywood… pic.twitter.com/R9p09JVKop— Suresh Chandra (@SureshChandraa) February 22, 2025