For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி..

10:12 AM Dec 17, 2023 IST | Web Editor
கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி
Advertisement

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘ஜெனரல் 1’ என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் கண்டறியப்பட்ட ‘ஜெனரல்.1’ வகை கொரோனா PA.2.86 வகையின் திரிபு ஆகும். தற்போது இந்த புதிய வகை கொரோனா பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஒருவருக்கு ஜெனரல் 1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் திருச்சியை பூர்விகமாக கொண்டவர் ஆவார். அதனைத் தொடர்ந்து திருச்சி அல்லது தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் 79 வயதான பெண் ஒருவருக்கு ஜெனரல் 1 வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு காய்ச்சல், இருமல் போன்ற லேசான அறிகுறிகள் இருந்ததால், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கடந்த மாதம் 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவரது மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டபோது, ​​ டிசம்பர் 8 ஆம் தேதி ஜெனரல் 1 நோய்த்தொற்று இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

Tags :
Advertisement