Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

01:33 PM Dec 06, 2024 IST | Web Editor
Advertisement
Advertisement

வளிமண்டல சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது .

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12-ம் தேதி தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் செங்கல்பட்டு ,விழுப்புரம், கடலூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .

Tags :
CycloneputhucherryRainseaTamilNaduvaanilaimaiyam
Advertisement
Next Article