உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதனால் இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.