Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

07:04 AM Nov 09, 2024 IST | Web Editor
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து நாளை, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்புள்ளது.

அது அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும் 11ம் தேதியில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 12ம் தேதியில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

இது தவிர 13ம் தேதியில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், 14ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement
Next Article