"நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்" - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
திருநெல்வேலியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் மாணவி பட்டம் பெற மறுத்த விவகாரம் குறித்த கேள்விக்கு,
தமிழ் பெண்கள் சுயமரியாதையோடு இருப்பார்கள் வீரமாக இருப்பார்கள் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு காரணமான தேர்தல் ஆணையத்தை கலைத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம். நடந்து முடிந்த தேர்தல் தவறான தேர்தல். எனவே இதனை 2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வளவு முறைகேடு நடந்தும் ஜனநாயக நாடு அமைதியாக இருக்கிறது. பார்லிமென்ட்க்கு புதிய தேர்தல் வைக்க வேண்டும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீதிமன்றம் தலையிட்டு பிரதமரையும், அமைச்சர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் முறைகேடு வெளியே வந்ததை போல் தமிழகத்தில் முறைகேடு செய்ய இயலாது. அதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் அதனை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.