Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் அரசு பேருந்தை வழிமறித்த மர்ம கும்பல் - கல்வீசி தாக்கியதில் நடத்துநர் காயம்1

08:34 AM Apr 02, 2024 IST | Web Editor
Advertisement

ஆழ்வார்த்திருநகரி பகுதியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அரசு பேருந்தை வழிமறித்து, கல்வீசி தாக்கியதில் பேருந்தின் நடத்துநர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு நேற்றிரவு கம்பத்திலிருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் நோக்கி 40 -க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து வந்துள்ளது. அப்போது ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்த்திருநகரி அருகே
வந்த அரசு பேருந்தினை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து பேருந்து மீது கல் வீசி
தாக்குதலை நடத்தி பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

பேருந்து அருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்து கதவுகளை திறக்கச்சொல்லி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தினை சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் அரசு பேருந்து நடத்துநர் கார்த்திகேயன் தலையில் காயமடைந்தது.

இதனையடுத்து பதற்றமடைந்த பயணிகள் உடனடியாக பேருந்ததினை எடுக்க சொல்லி
கூச்சலிட்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சுடலைமணி உடனடியாக பேருந்தினை இயக்கி அருகிலுள்ள ஆழ்வார்த்திருநகரி அரசு மருத்துவமனையில் காயமடைந்த நடத்துநர் மற்றும் பயணிகளை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் அதே பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது கல்
வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் கொள்ளைக் கும்பலாக இருக்கலாம் எனவும் வழிப்பறி செய்வதற்காக பேருந்தினை வழிமறித்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போருந்தில் பயணித்த நபர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Next Article