Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!

08:36 AM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கூலிப்படை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேசவரா பெட்ரோல் பங்கில்
தினக்கூலியாக வேலை பார்த்து வந்த நிலையில் சென்ன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிவடைந்துள்ளது.

பின்னர் இருவரும் காதல் திருமணம் பதிவு திருமணமாகச் செய்து தனி குடித்தனம்
நடத்தி வந்தனர். காளி கோவில் பூசாரி ஜானகிராமனுக்கு மகள் ஜெயஸ்ரீ காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமலே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த காளி கோயில் பூசாரி தனது
மருமகனான விஜி என்பவரை கொலை செய்ய தனது கோவிலுக்கு வரும் இளைஞர்களான
சிவா,திருமலை, மதி, ஆகியோரை தனது மகன் ராஜேஷ் உதவியுடன்
கூலிப்படையாகத் தயார் செய்து கொலை செய்ய சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜியை சரமாரியாக வெட்டி உள்ளனர். மேலும் தடுக்கச் சென்ற அவருடன் பணியாற்றிய அரவிந்த்சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜயை உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீட்டு
செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி
வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி
ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதைத்
தொடர்ந்து செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையிலான காவல் குழுவினர் விரைவாக செயல்பட்டு குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
sengamThiruvannamalai
Advertisement
Next Article