Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்...” - அமைச்சர் #TRBRajaa!

07:22 AM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் எச்சரித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் நேற்று (அக். 7) 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் கமலக்கண்ணன், இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்கவில்லை. இதனால், 6ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டாமால் முடிவடைந்தது.

தொடர்ந்து, நேற்று மாலை 3 மணியளவில் அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சாம்சங் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்கள் குழு மற்றொரு சாம்சங் தொழிலாளர்கள் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “சாம்சங் நிர்வாகிகள் 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்ல வேண்டும். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு இந்த பேச்சுவார்த்தையை நடத்தினோம் இந்த பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு காணப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிலையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் இன்று சாம்சங் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை!

3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு மற்றும் பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையே பல மாரத்தான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சாம்சங் நிர்வாகம் அவர்களின் ஊழியர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டது, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் சலுகைகள் உட்பட, மீதமுள்ள ஊழியர்கள் வேலை செய்ய திரும்பியவுடன் வேறு சில கோரிக்கைகளை பரிசீலிக்க ஒப்புக்கொண்டது.

https://twitter.com/trbrajaa/status/1843353523465138198?s=46

நாங்கள் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த சாம்சங்கின் தலைமையை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்ட ஊழியர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் பேசிய பல பணியாளர்கள் தங்கள் கவலைகளைக் கேட்ட நிர்வாகத்தின் விருப்பத்திற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான சிக்கலைப் பொறுத்த வரை, அது சரி செய்யக் கூடியதாகவே உள்ளது மற்றும் சட்டப்பூர்வ செயல்முறையை நாங்கள் மதிக்கிறோம்.

வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பி, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் எங்கள் பயணத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புகிறோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் தமிழ்நாட்டிற்கான வேலைகளையும், நமது தொழிலாளர்களின் நலனையும் தனது முதன்மையான முன்னுரிமையாக வைத்துள்ளார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்”

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி,ராஜா பதிவிட்டுள்ளார்.

Tags :
AnbarasanCMO TamilNaduCV GanesanMK StalinNews7TamilProtestsamsungSamsung workersstrikeTRB Rajaa
Advertisement
Next Article