For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மேற்கு வங்க கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

02:15 PM May 20, 2024 IST | Web Editor
தென்மேற்கு வங்க கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு    இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

தென்மேற்கு வங்க கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது.  ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது.  வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

இதனிடையே,  தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.  தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மே 22ம் தேதி தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது :

"குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மே - 23 மத்திய வங்கக் கடல், மே - 24 வடக்கு வங்க கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.  இதனால், மீனவர்கள் மே - 23ம் தேதி முதல் மத்திய வங்க கடலுக்கும்,  மே - 24ம் தேதி முதல் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23ம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 3 மின் உற்பத்தி திட்டங்களில் ரூ.24,500 கோடி முதலீடு! – அதானி கிரீன் நிறுவனம் அறிவிப்பு!

மே - 22ம் தேதி தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே - 24 ஆம் தேதி காலை மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதனால் மே - 24 மற்றும் 25ம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் கங்கை நதி மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மே - 23ம் தேதி காலை முதல் மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். மேலும், மே - 24ம் தேதி காலை முதல் வடக்கு வங்க கடலில் மணிக்கு 50-60 கிமீ வேகத்திலும் இடையையே 70 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும்"

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement