புதிய லைட் டிராம் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது...! எங்கு தெரியுமா?
இஸ்தான்புல் நகரத்தின் லைட் டிராம் பயணம் தற்போதும் தொடரும் நிலையில், புதிய லைட் டிராம் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலக்கட்டதில் லைட் டிராம் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தது. ரயில், மற்றும் சாலை போக்குவரத்து அதிகமானதால் இந்த டிராம் பயன்பாடு குறைந்து அது காணாமலே போனது. சாலையில் ஓடும் ரயில் என இந்த டிராமை சொல்லலாம். நடிகர் ஆர்யா நடித்திருந்த மதராஸ்பட்டினம் என்ற படத்தில் கூட இதனை காண்பித்திருப்பார்கள். தற்போது, இந்த டிராம் வசதியை மீண்டும் கொண்டு வர பல மாநிலங்கள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், இன்னும் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் இந்த டிராம் ஓடிக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த டிராமை உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் விரும்புவதாக இஸ்தான்புல்லின் மின்சார போக்குவரத்து இயக்குநரான அலி துக்ருல் தெரிவித்துள்ளார். இந்த டிராம் ஷாப்பிங் தெருவான இஸ்திக்லால் அவென்யூவின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் அந்நகரத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் புதிய டிராம்கள் உருவாக்கப்பட்டு உபயோகத்திற்கு கொண்டுவரும்போது, இந்த பழைய டிராம்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும் எனவும் இஸ்தான்புல்லின் மின்சார போக்குவரத்து இயக்குநர் அலி துக்ருல் தெரிவித்துள்ளனர்.