"கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம்" - டேவிட் வார்னர்
கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், நான் அதிலிருந்து நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கேமரான் பான்கிராஃப்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், நான் அதிலிருந்து நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
”2018-ம் ஆண்டு நடந்த விவகாரத்தை திரும்பிப் பார்த்தால், அதனை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அந்த முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினால் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த முடிவும் எனக்கு மகிழ்ச்சியாக தான் உள்ளது. ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் அணியை வழிநடத்தியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தோன்றுகிறது என்னவென்றால், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பு என்பது வெறும் பேட்ஜ்களை அணிந்து கொள்வது மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை அணியில் நான் என்னவாக இருந்தாலும் என்னுள் தலைமைப் பண்பு உள்ளது. அதற்கு நமது பெயருக்குப் பின்னால் கேப்டன், துணைக் கேப்டன் பதவியின் பெயர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.