நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிக்கப்பட்டது!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை தாக்கி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில்
சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர்
உயிரிழந்த நிலையில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர். இதனால் பொது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டு பிடிக்க வேண்டும் என கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவாலா, நாடுகாணி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
ரேஞ்ச் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பின்னர் ட்ரோன் மூலம் சிறுத்தை பதுங்கியிருந்த புதருக்குள் கும்கி யானை உதவியுடன் நுழைந்த கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், உயிருடன் பிடித்த சிறுத்தையை கூண்டில் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வன கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையின் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர்
அருணா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பின் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சரிதா மற்றும் மூன்று வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு முதலமைச்சர் அறிவித்த நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கூடலூர் பகுதியில் மனித வனவிலங்கு மோதல்களை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.