பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை; நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் சிறுத்தை பதுங்கியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை, நெல்லை என தமிழ்நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியது.
அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை வெளியேறி உள்ளது.
குன்னூரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு அஞ்சி வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தையை கவனித்து வந்த நிலையில் 26 மணி நேரத்துக்கு பின் சிறுத்தை வீட்டிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.