காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!
உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனி பொலிவால் உதகை நகரப் பகுதிகள் முழுவதும் காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி பொழிவு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உதகை அருகே தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் வெப்ப நிலை 0 டிகிரி வரை பதிவானது. பகல் நேரத்தில் வறண்ட மற்றும் கடும் வெயிலான கால நிலை நிலவும் நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டுகிறது. கடும் பனிப் பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருக தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனி பொலிவால் உதகை நகரப் பகுதிகள் முழுவதும் காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.