Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#boxoffice மாபெரும் வெற்றியடைந்த லப்பர் பந்து!... இத்தனை கோடி வசூலா?

04:39 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

லப்பர் பந்து படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது.

Advertisement

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி வாகை சூடியத் திரைப்படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓவியரான அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரராக இருக்கிறார். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் கெத்து முதல் ஆளாக ஆஜராகி கெத்து காட்டிவிடுவார். தீவிர விஜயகாந்தின் ரசிகரான இவர், மைதானத்தில் களமிறங்கினால், பொட்டுவைத்த தங்கக்குடம் பாடலை போட்டு அலப்பறை செய்துவிடுவார்கள். அதே ஊரில் பந்துவீச்சில் திறமைசாலியாக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

அட்டக்கத்தி தினேஷூம் ஹரிஷ் கல்யாணும் உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடுகின்றனர். அப்போது யார் கெத்து, யார் வெத்து என்பதில் இருவருக்குள்ளும் சண்டை உருவாகிறது. இந்த சண்டை நாளுக்கு நாள் ஈகோவாக வளர்கிறது. இதற்கிடையே தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும் காதலுக்கும் இடையே என்னென்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.

40 வயதிலும் வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடுவது, ஒரு பார்வையிலேயே காதல் மலர்வது என்று ரசனையோடு கதையை நகர்த்தி இருக்கிறார் படத்தின் இயக்குநர். 'அட்டக்கத்தி' தினேஷூக்கு அழகான கதாபாத்திரம். அதைச் சரியாகப் பயன்படுத்தி சதம் அடித்திருக்கிறார். அதேபோல பாலசரவணன், ஜென்சன் திவாகரும் உதவியிருக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே, கீதா ஆகியோரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஆரவாரமே இல்லாமல் வெளியானத் திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்த நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து, படக்குழுவினரும் விளம்பரப்படுத்த தொடங்கினார்கள்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. இந்த படத்துடன் போட்டியாக நான்கு படங்கள் வெளியானது. மேலும் அடுத்ததாக இரண்டு பெரிய படங்கள் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இப்படம் நான்கு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 37.5 கோடி வசூலித்ததாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ. 5 முதல் 7 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு உச்சுகொட்ட வைத்துவிட்டது எனலாம் இப்படத்தை பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி போன்றோர் மனதாரப் பாராட்டினார்கள். நல்ல வசூலை அள்ளிய இத்திரைப்படம் செப்டம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், படம் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 18ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Tags :
atta kathi dineshbox officeharish kalyanLubber Pandhu
Advertisement
Next Article