Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!" - மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!

08:11 PM Apr 11, 2024 IST | Web Editor
Advertisement

மலேசியவில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர்
ஜெயராமன் என்பவரின் மகன் சக்திவேல்(34) என்பவர். இவர் சிவகங்கை இளையான்குடியை சேர்ந்த ஏஜென்ட் ராம்நாத் என்பவர் மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியா சென்றுள்ளார். இதையடுத்து, அங்கு புகாரி என்பவரது உணவகத்தில் பணியாற்றி வந்தார். மாதந்தோறும் பெற்றோருக்கு சம்பளத்தை அனுப்பி வைத்ததோடு, அவ்வப்போது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசிவந்தவர்.

இதையும் படியுங்கள் : வெளியானது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பவேண்டும் என வேலைபார்த்த முதலாளியிடம் தெரிவித்துள்ளார். அப்போது, அவரின் பாஸ்போட்டை உணவகத்தின் முதலாளி பிடுங்கி வைத்துக்கொண்டுள்ளார். அதனை திருப்பிக் கேட்டதால் அதில் இருந்து
சம்பளம் கொடுக்காமல் பாஸ்போட்டையும் திருப்பி கொடுக்காமல் சக்திவேலை தாக்கி
தனிஅறையில் அடைத்துவைத்து துன்புறுத்துவதாக சக்திவேலுடன் வேலைபார்த்தவர்கள்  தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்கு சக்திவேல் உள்ள நிலையை, அவரது நண்பர் யாருக்கும் தெரியாமல் வீடியோகால் மூலம் சக்திவேலின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவரை உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேலின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
district CollectorHotelMalaysiaMayiladuthuraiparentsPetitiontortured
Advertisement
Next Article