சட்டப் பேரவையில் கார சார விவாதம் - அரசியல் வசனங்களுடன் வெளியான 'RM 34' டைட்டில் டீசர்!
ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காதலிக்க நேரமில்லை' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் நடித்துள்ள 'ஜீனி' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ரவி மோகனின் அடுத்த படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இப்படம் ரவி மோகனின் 34வது படமாக உருவாகிறது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கான டைட்டில் Announcement டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரவி மோகன் நடிக்கும் 34வது படத்தின் டைட்டில் Announcement டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சட்டபேரவை காட்சிகள் இடம்பெற்று, ரவி மோகன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் ஒரே கட்சியை சேந்த சட்டமன்ற உறுப்பினர்களாகவும், முதலமைச்சராக நாசரும் நடித்துள்ளனர். இவர்களுக்கிடையே கார சார விவாதங்களுடன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மாண்புமிகு தமிழக மக்களே !!#கராத்தே_பாபு எனும் நான் … #KaratheyBabu https://t.co/WyopnAO1bM
Dir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by #SundarArumugam @Screensceneoffl #RM34 #RaviMohan pic.twitter.com/mxObCEE0ku— Ravi Mohan (@iam_RaviMohan) January 29, 2025
இந்த Announcement டீசரில் “மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது, தமிழ்நாடு தமிழகம் ஆகாமல் இருக்க பாதுகாத்து கொள்ளவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது” என்ற அழுத்தமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் காட்டப்படும் சட்டபேரவை விவாதத்தின் இறுதியில் ‘கராத்தே பாபு’ என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.