For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒருவரை மட்டும் சார்ந்திராத நல்ல அணி வெற்றிப் பெற்றுள்ளது” - கவுதம் கம்பீர்!

05:12 PM Jan 05, 2025 IST | Web Editor
“ஒருவரை மட்டும் சார்ந்திராத நல்ல அணி வெற்றிப் பெற்றுள்ளது”   கவுதம் கம்பீர்
Advertisement

“ஒரு நல்ல அணி யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. யாரையும் சார்ந்திராத ஒரு நல்ல அணி வெற்றிப் பெற்றுள்ளது” என இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றிக் குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிப் பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,

எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் கருத்து சொல்ல முடியாது. ஓய்வு என்பது அவர்களுடையை விருப்பம். எல்லா வீரர்களும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும். அதைதான் நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் உள்ளவர்கள் முடிந்தால் உள்நாட்டு போட்டிகளிலும் விளையாடலாம்.

இந்திய டெஸ்ட் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை இப்போது பேசுவது சரியாக இருக்காது. 5 மாதங்களுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும். ஜூன், ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம். என்னை பொறுத்தவரை டிரஸிங் ரூமில் அனைவரிடமும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று நான் கூற விரும்பவில்லை. எங்களுக்கு தருணங்கள் இருந்தன, அவர் இருந்திருந்தால் பரவாயில்லை. எங்களிடம் இன்னும் 5 பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
ஒரு நல்ல அணி யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. யாரையும் சார்ந்திராத ஒரு நல்ல அணி வெற்றிப் பெற்றுள்ளது. எங்களால் போட்டியை வெல்ல முடியவில்லை, இது ஒரு எளிய விஷயம். காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியவில்லை” என தெரிவித்தார்.

Tags :
Advertisement