Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயணிகளுக்கு ஒரு நற்செய்தி!... நாட்டிலேயே முதன்முறையாக #Delhi விமான நிலையத்தில் இலவச ரயில் சேவை!

01:17 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு விரைவில் பெரிய வசதி கிடைக்கப் போகிறது.

Advertisement

தலைநகர் டெல்லியில் மூன்று விமான நிலையங்கள் இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, இந்த மூன்று விமான நிலையங்களையும் இணைக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி விமான நிலையங்களை இணைக்கும் இந்த ரயில் சேவையின் பணிகள் 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்த பணிகள் நிறைவு பெற்றால் பயணிகள் மூன்று விமான நிலையங்களுக்கும் எளிதாக சென்று திரும்ப முடியும் என கூறப்படுகிறது.

டெல்லியின் மூன்று விமான நிலையங்களையும் இணைக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளதாகவும், இது மூன்று விமான நிலையங்கள் மட்டுமன்றி ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில் சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணி நிறைவு பெறும் என்றும், மூன்று விமான நிலையங்களையும் இணைத்தால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
airportsDelhi
Advertisement
Next Article