Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vembakotai அகழாய்வு - சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு!

09:05 AM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை நேற்று கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : எங்க ஏரியா உள்ள வராதே… 2 சிங்கங்களை விரட்டிய வளர்ப்பு நாய்கள் – இணையத்தில் #VideoViral!

இந்நிலையில், சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை நேற்று (ஆகஸ்ட் 18ம் தேதி) கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், முன்னோா்கள் விலங்குகளை விரட்டுவதற்காக கல் பந்தைப் பயன்படுத்தியதும், முத்திரை மூலம் வணிகம் செய்து வந்ததும் உறுதி செய்யபட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குநர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.

Tags :
#Lampa stone ballExcavationVembakottaVirudhunagar
Advertisement
Next Article